அமெரிக்காவில் விஷ ஊசி ஏற்றி மரண தண்டனை நிறைவேற்றம்!
அமெரிக்காவில், இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபருக்கு அந்நாட்டு சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட் என்ற 25 வயது இளைஞரின் காதலி வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை பிணையில் எடுக்க பணம் தேவை என்பதால், 2001 ம் ஆண்டு ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடிக்க அந்த நபர் முயன்றார். இதன்போது ஏற்பட்ட மோதலில் இருவரை கொலை செய்தார். சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2005-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்க கோரி பல முறை மனுக்கள் தாக்கல் செய்தும் தள்ளுபடியானது.
இதையடுத்து நேற்று அமெரிக்க சட்டப்படி குற்றவாளி டெனால்டு கிரான்ட்டிற்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
இதன் மூலம் அமெரிக்காவில் இந்தாண்டில் முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri