தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை! - பிரித்தானிய கோடீஸ்வரரின் உருக்கமான கோரிக்கை
மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் மரணதண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் கடத்தியதற்காக, நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
12 வருடங்களுக்கு முன்னர் சிறிய அளவிலான ஹெரோயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதற்காக நாகேந்திரன் தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்படவிருந்தார்.
எனினும், நாகேந்திரனின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து மலேசிய அதிகாரிகளும் மனித உரிமைக் குழுக்களும் மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
எவ்வாறாயினும், நாகேந்திரன் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும் என்று சிங்கப்பூர் நீதிமன்றங்கள் முன்பு தீர்ப்பளித்தன.
இந்நிலையில், நாகேந்திரன் நல்ல மனநிலையில் இல்லை என்ற அடிப்படையில் இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரிக்கிறது.
இது குறித்து நாகேந்திரனின் சட்டத்தரணி எம்.ரவி கருத்து வெளியிடுகையில், “தனது கட்சிக்காரர் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு சிகிச்சையும் உதவியும் தேவை என கூறினார்.
சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டி, சிங்கப்பூர் அதிபரிடம் மன்னிப்புக் கோரும் மனுவில் 60,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை, பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் இந்த மரண தண்டனையை எதிர்த்துள்ளடன், நாகேந்திரனைக் காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Nagaenthran Dharmalingam’s ordeal in Singapore’s criminal justice system exposes the fatal flaws of the death penalty: https://t.co/LkC1peCYRR #DeathPenalty #NagaenthranDharmalingam pic.twitter.com/p1zBBIyvt2
— Richard Branson (@richardbranson) November 8, 2021