மட்டக்களப்பு விடுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

Sri Lanka Police Batticaloa Crime
By Bavan May 28, 2026 11:20 PM GMT
Report

மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகளின் விவகாரம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தாய்க்கு புற்றுநோய் என பொய் கூறி தந்தையார் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா என்பவரை நேற்று வியாழக்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்லேகம தேரர் விவகாரம் குறித்து வாய் திறந்த நாமல்!

பல்லேகம தேரர் விவகாரம் குறித்து வாய் திறந்த நாமல்!

உண்மையான பெயர் முகவரியை மறைத்து

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,   மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையில் தங்கியிருந்த இரு குழந்தைகள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (27) மாலையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் மூச்சு திணறி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மட்டக்களப்பு விடுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார் | Death Of Two Children In A Hostel In Batticaloa

இந்தநிலையில் குறித்த தந்தையாரின் அடையாள அட்டையை விசேட புலனாய்வு பிரிவினர் பரிசோதனை செய்த போது குறித்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர், பதுளையில் இருப்பதாகவும் அவருடைய பழைய அடையாள அட்டை 2023ஆம் ஆண்டு தொலைந்து போயுள்ள நிலையில் அவர் சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் வசித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த பதுளையைச் சேர்ந்தவரின் தொலைந்த அடையாள அட்டையை எடுத்து கொண்ட உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய மன கொடவத்த, பரடுவ, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா அவரது உண்மையான பெயர் முகவரியை மறைத்து பதுளையில் உள்ளவரின் அடையாள அட்டை தான் என காட்டி வந்துள்ளார் என விசேட புலனாய்வு பிரிவினர் விசாரணை மூலம் கண்டறிந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து மனைவிக்கு புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொய்களை கூறி இரு குழந்தைகளையும் ஆலயங்கள், பள்ளிவாசல்கள், பொது இடங்கள் என மாவட்டம் மாவட்டமாக கொண்டு சென்று பிச்சை எடுத்து வந்துள்ள அவர் மட்டக்களப்புக்கு கடந்த 20ஆம் திகதி வந்துள்ளார்.

குறித்த விடுதியில் மனைவி காத்தான்குடி வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை பார்க்க வந்துள்ளதாக பொய் கூறி அறையை வாடகைக்கு எடுத்து கொண்டு இரு குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்

அதன் பின்னர் மனைவியை காத்தான்குடி வைத்தியசாலைக்கு பார்த்து விட்டு வருவதாக குழந்தைகளுடன் வெளியேறி அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று மனைவிக்கு புற்றுநோய் என பிச்சை எடுத்து வந்துள்ளதாகவும் சம்பவ தினம் அன்று  பிற்பகல் 2.00 மணிக்கு குழந்தைகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு மாடியின் கீழ் தரையில் உள்ள மது விற்பனை நிலையத்தில் சென்று மது அருந்தியுள்ளார்.

மட்டக்களப்பு விடுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார் | Death Of Two Children In A Hostel In Batticaloa

பின்னர் சுமார் 2 மணித்தியாலத்தின் பின்னர் அறைக்கு சென்ற போது அங்கு தீ பற்றி இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அவரது மனைவி மாத்தறையில் அவரது ஊரில் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த தந்தை கடந்த 2021.03.10 அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டதுடன் (குற்றச்சாட்டின்றி) 2022.03.21 சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது, 2022.09.10 சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிடியாணை மற்றும் அனுராதபுரம், கொழும்பு போன்ற பல பிரதேசங்களில் குழந்தைகளை வைத்து பண மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் குறித்த நபரை நேற்று வியாழக்கிழமை (28) இரவு கைது செய்ததுடன் குழந்தைகளின் தயார் வரவழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பெண்ணின் மரியாதைக்காக தேசிய தலைவர் எடுத்த வரலாற்று முடிவு

ஒரு பெண்ணின் மரியாதைக்காக தேசிய தலைவர் எடுத்த வரலாற்று முடிவு

தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர் யார்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்

தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர் யார்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பை கதிகலக்கிய துப்பாக்கிச்சூடு! புதிய பிரதமருக்கு ஏற்பட்ட போட்டி

கொழும்பை கதிகலக்கிய துப்பாக்கிச்சூடு! புதிய பிரதமருக்கு ஏற்பட்ட போட்டி

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US