முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும திடீர் மரணம்
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயது என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மக்களிடத்தில் அதிக செல்வாக்கைப் பெற்றவராக காணப்பட்டார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்த் தாக்கங்களின் போது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்வதில் மிக மும்முரமாக செயற்பட்டு பலரால் பாராட்டப்பட்ட ஒருவர்.
குறிப்பாக, கிராமத்து மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றவராகவும் இவர் இருந்து வந்துள்ளதோடு நல்லாட்சி காலத்தின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து அவர் விலகி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
