அமெரிக்காவின் முதல் கறுப்பின ராஜாங்க செயலர் மரணம்
அமெரிக்காவின் முதல் கறுப்பின இராஜாங்க செயலர் மற்றும் உயர் இராணுவ அதிகாரியான கொலின் பவல் (Colin Powell) திங்களன்று தனது 84 வயதில், கோவிட் காரணமாக மரணமானார்.
அவருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கொலின் பவல், பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மிக முக்கியமான கறுப்பின மனிதராக திகழ்ந்தார்.
மூன்று குடியரசுக் கட்சித் தலைவர்களின் பதவிக் காலங்களில் உயர் பதவிகளில் பணியாற்றினார். அமெரிக்காவின் பல ஜனாதிபதிகள், பவலின் ஆலோசனை மற்றும் அனுபவத்தை நம்பியிருந்தனர்.
1987 முதல் 1989 வரை ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கீழ் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பவல் பணியாற்றினார். பின்னர் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் ராஜாங்கச் செயலாளராக பணியாற்றினார்.