ஸ்பெயினில் திடீர் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கிழக்கு ஸ்பெயினில் (Spain) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த அனர்த்தத்தினால் 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் மேலும் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
[NMYGXJD ]
பாரிய சேதங்கள்
பல தசாப்தங்களில் ஸ்பெயினிற்கு மிக மோசமான சேதங்களை ஏற்படுத்திய வெள்ளம் இது என்று சர்வதேச ஊடகங்கள் பதிவிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த வெள்ளம் காரணமாக பலர் காணாமல் போயுள்ளதுடன் பல பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அந்நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஸ்டிக்கவுள்ளதாகவும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
1973ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிறகு அங்கு ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் இதுவாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri