திடீரென மயங்கி வீழ்ந்து இளைஞரொருவர் மரணம் (Photos)
வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் எனும் தேசிய சேமிப்பு வங்கி காவல் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள நுகவில் வயலில் தனது சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உடனடியாகவே அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன்.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.