நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சடலங்கள் மீட்பு
நாட்டின் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாவலி ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 - 70 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மீரிகம - ஹொரகெலே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கல்முனை பிரதேசத்தையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி ஆற்றில் மாடுகளை மேய்ப்பதற்காக் இறங்கிய இளைஞன் ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல்போன இளைஞன் இன்று சடமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை சேனைக்குடியிருப்பு 1 பிரிவு விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய
சுகிர் பிரதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை மீட்பதற்காக பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.