திருகோணமலையில் யானை தாக்குதலில் ஒருவர் பலி
திருகோணமலை - 10 ஆம் கட்டை கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில்
சடலமொன்று இன்று (12.03.2023) காலை மீட்கப்பட்டுள்ளது.
வெல்கம் விகாரை பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வயலுக்குச் சென்ற போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதன்போது திருகோணமலை - அனுராதபுரம் வீதி - வெல்கம் விகாரை பகுதியைச் சேர்ந்த மாதர ஆராச்சி விதானகே ஹரிச்சந்ர (53 வயது) நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது வைத்தியசாலை
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள் : பதுர்தீன் சியானா
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam