கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தவறுதலாக அதிகளவு காபனீரொட்சைட் வழங்கப்பட்டமையால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - நுகேகொடை பகுதியில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு, மார்பக அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக செய்யப்பட்டு, அதன் பின்னர் ஒட்சிசன் வழங்கப்படுவதற்கு பதிலாக அதிகளவு காபனீரொட்சைட் வாயு வழங்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு சேவையில் குறைபாடு
இந்த சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளதா அல்லது ஒட்சிசன் சிலிண்டர் மாசடைந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வைத்தியசாலையின் பராமரிப்பு சேவையில் உள்ள குறைபாட்டையே இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
