கொடூர சம்பவத்திற்கு இலக்கான பிரியந்த! பாகிஸ்தானிடம் இலங்கை விடுத்துள்ள செய்தி
மத தீவிரவாதத்திற்கு மன்னிப்பளித்து குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டால் தொடர்புபட்ட அரசாங்கம் இழப்பீட்டினை வழங்கவேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தின் மூலம் நாங்கள் அறிந்துகொள்வது என்னவென்றால் மததீவிரவாதத்திற்கு மன்னிப்பு அளிக்கப்பட்டால் மக்களிற்கு சுதந்திரம் என்பது இல்லாமல் போய்விடும் மக்கள் தங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்க முடியாத நிலையேற்படும்.
பாக்கிஸ்தானின் பெரும்பான்மையான மக்கள் இந்த கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ஒரு நாடு என்ற வகையில் மீண்டும் ஒருவருக்கு இவ்வாறான சம்பவம் நிகழாமலிருப்பதை பாக்கிஸ்தான் உறுதி செய்யவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எந்த நாட்டவருக்கும் எதிரானதாக அது இருக்கலாம் அதனை அனுமதிக்க முடியாது. மததீவிரவாதத்திற்கான விலையை இறுதியில் அந்த நாடுகளின் அரசாங்கங்களே செலுத்துகின்றன.
பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு இழப்பீட்டை வழங்குமாறு அரசாங்கம் என்ற அடிப்படையில் பாக்கிஸ்தானை கோரியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
