எங்களது கண்ணீரும் தோற்றுப் போனது! - மங்களவின் மறைவினால் கடும் வேதனையில் முன்னாள் ஜனாதிபதி
அன்புக்குரிய மங்கள, என் நண்பர், சகோதரர்.. இந்த இருண்ட நாளில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டீர்கள். உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனைகள் செய்தோம். கண்ணீர்விட்டோம். ஆனால் அனைத்தும் தோற்றுப் போனது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்கு இலக்காகி இன்று காலை மரணமடைந்தார்.
அவரது உடல் இன்று மாலை பொரள்ளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சர்வதேச இராஜதந்திரிகள், இலங்கை அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் மங்களவின் மறைவிற்கு தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மங்கள சமரவீரவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
தனது மீக நீண்ட கால நண்பரான மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் சமயம் விரைவில் அவர் நலம் பெற்று வரவேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மங்கள சமரவீர இன்று உயிரிழந்த பின்னர் அவரின் உடலை தகனம் செய்ய கொண்டு சென்ற போது பொரள்ளை பொது மயானத்தின் வெளியே சோகமே உருவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நின்றிருந்தமை பார்ப்பவர்களின் மனதை மிக வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிடுகையில், மங்கள, நீங்கள் இன்னும் இறக்கவில்லை. இலங்கையை கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு போராட்டத்திலும் நீங்கள் உயிர்வாழ்வீர்கள்.
அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராக நிற்கும் அனைவரின் இதயங்களிலும் செயல்களிலும் நீங்கள் வாழ்வீர்கள்.
பல்வேறு அமைச்சு பதவிகளில் நீங்கள் செய்த மகத்தான சேவையை நான் எப்போதும் நினைவில் கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

430 கோடிகள் மதிப்புள்ள லண்டன் மாளிகை: முன்னாள் மனைவிடம் ஒப்படைக்க அமெரிக்கருக்கு உத்தரவு News Lankasri
