10 போத்தல் கசிப்புடன் வியாபாரி ஒருவர் கைது(Photos)
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 10 போத்தல் கசிப்பை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற நபரொருவரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரிடமிருந்து 10 போத்தல் கசிப்பு மற்றும் அதனைக் கொண்டுசெல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பனவற்றை மீட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று காலை வவுணதீவு முள்ளாமுனையில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பனையறுப்பான் பிரதேசத்திலிருந்து கரவேட்டி பிரதேசத்துக்கு உரைப்பை ஒன்றில் 10 போத்தல் கசிப்பை வியாபாரத்துக்காகக் கொண்டு சென்ற குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய இளைஞன் எனவும் இவரை நீதிமன்றில் இன்று
முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





