சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம்! எடுக்கப்பட்ட நடவடிக்கை
சட்டவிரோதமாக லேண்ட் க்ரூஸர்(Land Cruiser) வாகனத்தை இறக்குமதி செய்த வாகன விற்பனையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், இன்றையதினம்(05.02.2025) கொழும்பு மொரந்துடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இறக்குமதியாளர், பாணந்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை
இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட குறித்த வாகனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
