அநுர அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்த தமிழ் எம்.பி! அம்பலப்படுத்திய கஜேந்திரன்
மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் வவுனியாவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார்கள் என்றும், இதை சுட்டிக் காட்ட முதுகெலும்பற்ற அடைக்கலநாதன் தான் வரவு செலவுத் திட்டத்தில் நன்மை இருப்பதாக கூறி அதை ஆதரித்துள்ளார் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் போராட்டம்
“கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் எமது விடுதலைப் போராட்டத்தை அரசாங்கம் அடக்கிய போது எதிர்வரும் 50 வருடங்களுக்கு தமிழ் மக்கள் தமது இருப்பை பற்றி சிநதிக்க கூடாது என்று கருதியே கொடூரமாக செயற்பட்டது.
பலர் கைது செய்யப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.
இன்று எமது தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்கான குரல் வலுவாக இருக்கின்றது. ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு இல்லை என்பது தெட்டத்தெளிவானது.
நாங்கள் தோற்றுப் போனாலும் ஒரு கொள்கையோடு நின்று தோற்றுப் போனார்கள் என்ற வரலாறு படியட்டும் என்று தான் கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வருகின்றோம்.
தமிழ் தேசிய பேரவை உதயமாகியதை நினைத்து மகிழ்சியடைகின்றோம். மரணிதத மாவீராகளின் தியாகங்களுக்கு வலிமை இருக்கின்றது என்று உணர்கின்றேன்.
அடிமையாக வாழக் கூடாது என்பதற்காக நாம் எப்படி செயற்பட வேண்டும் என்று தான் பாடங்களை படிக்க வேண்டும்.
நாங்கள் பொறுப்பற்ற முடிவுகளை எடுத்திருக்கவில்லை. மக்களுடைய இருப்பு சார்ந்தே ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
