தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமைக்கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்காளர் இடாப்பின் ஆரம்ப வரைவு தற்போது பொதுமக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள்
வாக்காளர்கள் தமது விபரங்கள் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சரிபார்க்க முடியும்.

மக்களின் வசதிக்காக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பினைப் பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இடாப்பில் பெயர்கள் விடுபட்டிருப்பின் அல்லது தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அவற்றை உரிய காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam