விமானத்தின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்: பிரித்தானியாவில் சம்பவம்
ஸ்பெய்ன் நாட்டின் டெனெரிஃப் தீவில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்ற விமானமொன்றின் கழிவறையில் பயணியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விமானத்தில் கழிவறைக்கு சென்ற நபர் நீண்ட நேரமாகியும் திரும்பாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,
அவசர மருத்துவ உதவி
“பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதை அடுத்து விமானமானது Cork விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எனினும், துரதிர்ஷ்டவசமாக அந்த பயணி உயிரிழந்துள்ளார். இந்த துயரமான நேரத்தில் அந்த பயணியின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இதனிடையே அந்த விமானத்தின் பயணி ஒருவர் தெரிவிக்கையில்,
சந்தேகமடைந்த பயணிகள்
உயிரிழந்த பயணி நீண்டநேரமாக கழிப்பறையில் இருந்து வெளியில் வரவில்லை. இதனையடுத்து விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, கழிவறைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.
அந்த நபரை முயன்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். மேலும், அவர் தனியாக பயணம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை அடுத்து சக பயணிகள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்." என்றார்.
அமெரிக்காவிலிருந்து சென்ற விமானத்தில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு: குழப்பத்தில் பயணிகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |