சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது 36) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதன்போது சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகளில் அவர் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற விடயம் தெரியவந்தது.
விளக்கமறியல் உத்தரவு
இதையடுத்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
