வெல்லாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு (PHOTOS)
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி - அம்பிளாந்துறை பிரதான வீதியில் தும்பங்கேணி சந்தியின் வளைவு பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் தீவிர விசாரணை
வளைவு பகுதியில் உள்ள வயலில் மோட்டார் சைக்கிள் மற்றும் சடலம் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பாலையடி வட்டையிலிருந்து கடுக்காமுனை நோக்கிச்சென்ற பாலையடிவட்டை 37ஆம் கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரிசிகரன் (36வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த வளைவு பகுதியில் வேகமாகச்சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam