அம்பாறையில் வயல் காணி ஒன்றில் இருந்து சடலம் மீட்பு (Photos)
அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள வயல் காணியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அந்த பகுதி மக்களால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலம் நேற்று(23.12.2023) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது சித்தீக் ஹாஜியார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அருகில் இருந்த வீடு ஒன்றில் சடலம் மறைத்து வைக்கப்பட்டு மறுநாள் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(22) வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான கூலி கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
