பேருந்தில் பயணித்தவர் திடீரென மரணம்: தகவல் வழங்கிய சக பயணிகள்
கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.
டிக்ஓயா பட்ல்கல மேற்பிரிவு பகுதியில் வசிக்கும் நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் முச்சக்கரவண்டி சாரதி என்பதுடன், தொற்று அல்லாத நோய்க்காக மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தில் மரணம்
ஹட்டனில் நேற்று காலை இருந்து போடைஸ் நோக்கி தனியார் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் பேருந்தில் இருந்து இறங்காததால் சந்தேகமடைந்த ஏனைய பயணிகள் இது குறித்து சாரதி மற்றும் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து அவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தந்தையின் சடலம்
ஹட்டன் பொலிஸாரின் பணிப்புரைக்கமைய, உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் அதே பேருந்தில் திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
