காயங்களுடன் வீதியோரத்திலிருந்த சடலம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் (Video)
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மொரஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த நதீர சம்பத் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும், அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் அந்த நபர் விபத்தில் சிக்குவது பதிவாகியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும், குறித்த விபத்தை ஏற்படுத்திய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் சந்தி வீதியோரத்திலிருந்து காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பில் விசாரணை
கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை திம்புள்ள பத்தனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு தடயவியல் பிரிவு பொலிஸாரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என தெரியவருகிறது.
விசாரணைகள் தீவிரம்
காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இவர் தொடர்பான அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.











எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
