அநுராதபுரத்தில் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஹொரவ்பொத்தான - கம்மெத்த கம்மானய பகுதியைச் சேர்ந்த ரன்ஹாமிகே வணிகசேகர (62 வயது) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் இக்குளத்தில் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், சில நேரங்களில் மது அருந்துவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆனாலும் இவருடைய மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri