யாழ். ஊர்காவற்துறையில் கிணற்றில் இருந்து இரண்டு சிறுமிகள் சடலங்களாக மீட்பு
யாழ். ஊர்காவற்துறை(Kayts) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய கிணறு ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு சடலங்களும் இன்றிரவு(01.06.2024) 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுமிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர்.
கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களும் காணப்பட்டன. இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
