கடலில் மிதந்து வந்த மதுபானம்: கரைக்கு எடுத்து வரப்பட்ட கடற்றொழிலாளர்களின் சடலங்கள்
மதுபானம் என கருதி கடலில் மிதந்த போத்தலில் இருந்த பொருட்களை உட்கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு கடற்றொழிலாளர்களின் சடலங்கள் தங்காலை கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கள் நேற்று (03) காலை கரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை
டெவோன் 05 என்ற கடற்றொழில் கப்பலும் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியிருந்த நிலையில், மற்றுமொரு கப்பல் மூலம் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது.
நீதவானின் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
முன்னதாக மதுபானம் என்று கருதி அதனை உட்கொண்ட நிலையிலேயே இந்த நால்வரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், குறித்த பானத்தை அருந்திய மேலுமொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |