மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தளவாய் காட்டு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அருள்நேசபுரம் கடுக்காமுனை கிராமத்தில் வசிக்கும் 57 வயதுடைய ராசசிங்கம் மோசிகவாகனம் என்பவரே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்குதல்

கடுக்காமுனை பகுதியில் இருந்து விறகு எடுப்பதற்காக 3 பேர் திக்கோடை தளவாய் காட்டு பகுதிக்கு சென்றபோது மறைந்திருந்த காட்டு யானை துரத்தியுள்ளது.
இதன்போது ஏனைய இருவரும் ஓடி தப்பியுள்ள நிலையில் ஒருவர் காட்டு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்
பிரிவில் தொடர்ச்சியான மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri