செயலிழந்த மின் உற்பத்தி நிலையம் - மீண்டும் மின் தடை ஏற்பட வாய்ப்பு
கெரவலப்பிட்டி மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று இரவு செயலிழந்தது.
அத்துடன், களனிதிஸ்ஸ செஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திப் பணிகளும் நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேற்கு முனை ஆலையத்தின் 270 மெகாவாட்களை தேசிய மின் உற்பத்தி நிலையத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் செஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்தின் 130 மெகாவாட் தேசிய கட்டமைப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததனை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், செஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையம் நேற்றிரவு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன், கெரவலப்பிட்டிய மேற்கு முனைய மின் நிலையம் செயலற்ற நிலையில் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
