ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களுரை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 26 வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று(18) நடந்தது.
இந்தப் போட்டியில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களுரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களுரு
நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
இதையடுத்து, ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களுரு அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
டிம் டேவிட் 26 ஓட்டங்கள் விராட் கோலி 19 ஓட்டங்கள், படிக்கல் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி அணி சார்பில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், லுங்கி இங்கிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் முன்னணி விக்கெட்டுகளை இழந்ததது. கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஸ்டப்ஸ் கடைசி வரை போராடினார். அவருக்கு டேவிட் மில்லர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இறுதியில் டெல்லி அணி 19.5 ஓவரில் 179ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டப்ஸ் 60 ஓட்டங்களும், மில்லர் 22 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam