ஜே.வி.பி அரசாங்கத்தில் கூட்டணி வைத்து கொண்ட கால விபரங்களை கோரும் தயாசிறி
2004 முதல் 2008 வரை காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 5 லட்சம் ரூபாவினை விட அதிகமாக பெற்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் நேற்று (16) அதிகாரப்பூர்வமாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளார்.
2008 முதல் 2024 வரை பெற்றவர்களின் பட்டியல் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு முந்தைய 2004–2008 இடைப்பட்ட நாலாண்டு காலம் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆட்சி கூட்டணியில் இருந்த காலமாக இருப்பதால், அவர்களும் நிதி பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தயாசிறி தெரிவித்தார்.
இந்த விவரங்கள் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த நான்கு ஆண்டுகளுக்கான ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போது தகவல் அறியும் ஆணைக்குழு தலைவர் மற்றும் இயக்குநர் இல்லாமல் செயல்படுகிறது என்றும், இக்குழுவை செயலற்றதாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சி செய்கிறது என்றும் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
