ஜனாதிபதிக்காக மெனிக்கே மகே ஹித்தே பாடலை பாடிய தயாசிறி?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய மெனிகே மகே ஹித்தே பாடலை அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) பாடியுள்ளார்.
யுகதெனவ் மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை தொடர்பில் இன்றைய தினம் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதியின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக ஜனாதிபதி இராப்போசன விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.
ஜனாதிபதியின் விசேட கோரிக்கைக்கு அமைய யொஹானி டி சில்வா பாடிய மெனிக்கே மகே ஹித்தே பாடலை தயாசிறி பாடியுள்ளார்.
ஜனாதிபதி ஒலிவாங்கியை தயாசிறியிடம் கொடுத்து பாடல் ஒன்றை பாடுமாறு கோரியதாகவும், தாம் ஆயத்தமாக வரவில்லை என தயாசிறி கூறியதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும் ஆயத்தமாக தேவையில்லை தயாசிறி நல்ல பாடகர் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதன் பின்னர், ஜனாதிபதிக்கு எந்த பாடல் பிடிக்கும் என வினவிய தயாசிறி, மெனிக்கே பாடலை பாடியுள்ளார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆளும் கட்சிக்குள் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
