பழிவாங்கப்படும் ரணில்! பகிரங்கமாக காரணத்தை கூறிய எம்.பி
ஷானி அபேசேகரவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளைக் கொண்டு ரணிலை பழிவாங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல் கூட்டணியினர் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ரணில் விக்ரமசிங்கவின் கடந்த கால நடவடிக்கைகள் காரணமாகவே தற்போதைய அரசாங்கம், இன்று கூறப்படும் மோசடிகள் பற்றி பேச முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
விசாரணை நிறைவடைந்துள்ளது
பி அறிக்கையின் படி வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும் எனினும் ஷானி அபேசேகரவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளைக் கொண்டு ரணிலை பழிவாங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.
ரணில் விக்ரமசிங்க, குற்றவியல் அவதூறு சட்டத்தை ஒழித்தமை மற்றும் ஜனாதிபதியின் விலக்குரிமை போன்ற விடயங்களை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.
வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்ததும் ரணிலே என தயாசிறி கூறியுள்ளார்.





அரசியல் கேள்வி - ஒரு அறிவுச் சமூகம் எப்படியிருக்க வேண்டும்..! 22 நிமிடங்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
