ரணிலை ஆதரிப்போருக்கு தகுந்த சன்மானம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஸ்ரீறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணிசமான எண்ணிக்கையிலான மதுபானம் மற்றும் துப்பாக்கி உரிமங்களை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1200 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் 300,000 ரூபா பெறுமதியானது முதல் அனைத்து வகையான துப்பாக்கிகளையும் வைத்திருக்கும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இவ்வாறான செயலை மன்னிக்க முடியாது. மேலும், ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறே கவர்ந்து வருகிறார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் வீடுகள் சேதப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை திருத்துவதற்கு ஒரு வீட்டுக்கு 30 மில்லியன் ரூபா நிதியை பகிர்ந்தளித்துள்ளார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
