டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் தீ விபத்து: வீடு முற்றாக எரிந்து நாசம்(Video)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் தொடர் லயக்குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எறிந்துள்ளமையால் அந்த வீட்டிலிருந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக டயகம பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேச வாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த
பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.




போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri