திருகோணமலையில் பல உயிர்களை காவு கொண்ட விபத்து! முடங்கிய சில பகுதிகள்
திருகோணமலை - கிண்ணியா, குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்தில் மரணித்த உறவுகளுக்காக துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கிண்ணியாவின் பல பகுதிகளில் இன்று வெள்ளைக்கொடிகளைக் காணக்கூடியதாக உள்ளது எனவும், சில பகுதிகளில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டு அப்பகுதிகள் முடங்கியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் அனைத்து வீடுகள், கடைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிட்டு அமைதியான முறையில் துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam