ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 33 ஆவது தியாகிகள் தின நினைவேந்தல் (Video)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33 ஆவது நினைவு அஞ்சலி மட்டக்களப்பில் இன்று (24.06.2023) சனிகிழமை எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித் தலைவருமான இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.
படுகொலை
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர் பொன்.செல்லத்துரை (கேசவன்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னால் உறுப்பினர்கள், உயிர்நீத்தவர்களின் உறவுகள், மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட பத்மநாபாபின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
