மாகாண சபை தேர்தலில் களமிறங்கவுள்ள லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள்?
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் (Lakshman Kiriella) மகள் சமிந்த்ராணி கிரியெல்ல போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது மத்திய மாகாண சபை தேர்தல் வரலாற்றில் ஒரு முன்னோடியாக அமையவுள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) மகன் தஹம் சிறிசேன (Daham Sirisena) அரசியலில் உத்தியோகபூர்வமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தஹம் சிறிசேன அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
