தந்தை மருத்துவமனையில் மரணம் - மர்மமான முறையில் மகள் வீட்டில் உயிரிழப்பு
கண்டி - வெலம்பொட, மாணிக்காவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
70 வயதான தந்தையொருவர் கவலைக்கிடமான நிலையில் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வீட்டின் அறை ஒன்றிலிருந்து அவரது மகளின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகள் வீட்டில் உயிரிழப்பு
உயிரிழந்த மகள் 47 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் என தெரியவந்துள்ளது. தந்தையே அவரைக் கொலை செய்துவிட்டு பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி மாலை 6 மணியளவில் போதையில் வீட்டிற்கு வந்த தந்தை, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இரவு 11.00 மணியளவில் மனைவியை அறை ஒன்றில் அடைத்து கதவைப் பூட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் மகள் அறைக்குள் அலறும் சத்தம் கேட்டதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மறுநாள் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது கணவர் கீழே விழுந்து கிடந்ததாகவும், அயலவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கம்பளை மருத்துவமனையில் கணவர் உயிரிழந்ததுடன், நேற்று காலை 10.00 மணியளவில் பொலிஸ் குழுவொன்று சென்று வீட்டைப் பரிசோதித்தபோது, அறையில் உள்ள படுக்கையில் இருந்த மகளின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan