அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி சென்று சித்திரவதை செய்யப்பட்டுள்ள ஆப்கான் தூதுவரின் மகள்
பாக்கிஸ்தானிற்கான ஆப்கான் தூதுவரின் மகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று பின்னர் காயங்களுடன் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கான் தூதுவர் நஜீப் அலிகில்லின் 26 வயதான மகள் சிசிலா அலிகில் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளை வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றதாக ஆப்கான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,ஆப்கான் தூதரக பணியாளர்கள், இராஜதந்திரிகளிற்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
