3 வருட ஐ.பி.எல் போட்டிகளுக்கான திகதி அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.பி.எல் (IPL) போட்டிகளின் 18ஆவது தொடர் அடுத்த வருடம் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகி மே 25ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறுமென்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் 74 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் போட்டிகளுக்கான திகதிகள் குறித்து இன்று (22) காலை அணி உரிமையாளர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான இடம் மற்றும் எந்த திகதிகளில் அணிகள் மோதுவது உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏலத்துக்கான இறுதிப் பட்டியல்
ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 574 வீரர்கள் இடம் பெற்றுள்ளதோடு, இதில் 366 இந்தியர்களும் 208 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இம்முறை ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 19 இலங்கை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் இந்திய பெறுமதியில் அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் 15 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை வீரர்கள்
இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவன் துஷார, ஜெப்ரி வெண்டர்சே, பெத்தும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, துஷான் ஹேமன்த, தசுன் ஷானக மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், 2026ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் மார்ச் 15ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலும், 2027ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் 14ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரையிலும் நடை பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri