2034 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொருக்கான மைதான திட்டத்தை வெளியிட்ட சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கட்டப்படும் புதிய கால்பந்து மைதானத்தின் திட்டம் முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மைதானம் 2029ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2034 FIFA உலகக் கோப்பையை நடத்த சவுதி அரேபியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
48 அணிகள்
இதற்கு காரணம், 2023 ஆம் ஆண்டுக்கான காலக்கெடுவிற்கு முன்னதாக, நாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலத்தை முறையாகச் சமர்ப்பித்த ஒரே நாடு சவுதி அரேபியா மட்டுமே.
இந்நிலையில், போட்டிகள் நடைபெறும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 48 அணிகள் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா
2034 ஃபிஃபா உலகக் கோப்பை சவுதி அரேபியாவில் 15 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை குறிவைத்து ரியாத் நகரில் புதிய மைதானம் கட்ட சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
