இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த திட்டம் - கல்வி அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் காரணமாக பாடசாலைகள் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கல்வியாண்டுக்குள் பாடங்களை கற்றுக் கொடுக்க விசேட திட்டங்களை கல்வி அமைச்சு வகுத்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kapila Perera) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாற்று வழிகளைப் பயன்படுத்தி விடுபட்ட பாடங்களை கற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் விடுபட்ட பாடங்களைக் கற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை திறந்தும், வேறு மாற்று வழிகளை பயன்படுத்தியும் விடுபட்ட பாடங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.