கெஹெலியவின் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி கூடி ஆராய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (22.03.2024) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு பரிசீலனை
இந்த மனு தொடர்பான ஆவணங்கள் தமக்கு கிடைக்கவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உரிய ஆவணங்களை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்குமாறு மனுதாரருக்கு அறிவித்த நீதிபதி, மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை பரிசீலனைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri