தசுன் சானக்கவிற்கு ஓராண்டு தடை விதிப்பு
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தசுன் சானக்க, அந்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மீறியதாகக் கூறி, அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
34 வயதான தசுன் சானக்கவை, லாகூர் கலாண்டர்ஸ் அணி 75 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது. தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே, கடந்த மார்ச் 21 அன்று சானக்க திடீரென தொடரிலிருந்து விலகினார்.
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய அடுத்த நாளே (மார்ச் 22), இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கர்ரனுக்குப் பதிலாக மாற்று வீரராக சானக்க இணைந்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை நடத்தியிருந்தது.
தசுன் சானக்க தன்னிச்சையாகத் தொடரிலிருந்து விலகியது, வீரர் பதிவு விதிமுறைகள் மற்றும் முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் எனவும் முறையான காரணங்கள் ஏதுமின்றி அவர் விலகியது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
லீக் தொடரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, தசுன் சானக்க தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய எனது முடிவிற்காக நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.
இதற்காக பாகிஸ்தான் மக்கள், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் சமூகத்திடம் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடையின் காரணமாக எதிர்வரும் ஓராண்டிற்கு தசுன் சானக்கவினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 7 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan