தனுஸ்கவை தொடர்ந்து மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மீதும் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்க ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் மற்றுமொரு வீரர் மீதும் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட தசுன் சானக்கவும் சென்றிருந்தார்.
இந்த நிலையில் அவர் காணி வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காணி வர்த்தகம்
விளையாட்டுத்துறை அமைச்சில் தனுஷ்க குணதிலக்க தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்தே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதேவேளை கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றவர் இவ்வாறு காணி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan