சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர்! குவியும் முறைப்பாடுகள்
இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ரி20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற பல சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ச மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பானுகா ராஜபக்ச அறையில் இல்லாத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மீது தொடரும் சர்ச்சை
பானுகா ராஜபக்ச போட்டியில் பங்கேற்பதற்காக பேருந்து புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே பேருந்துக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மூவரடங்கிய குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை அணியின் சகல துறை வீரர் சாமிக்க கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க ஆகியோர் மீதும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan