தமிழர்களுக்கு எதிரான பேரினவாத இருளை தோற்கடிக்க ஒன்றிணையுமாறு கோரிக்கை!

Tamils Anura Kumara Dissanayaka NPP Government
By Shan Nov 07, 2026 10:31 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்று (06.11.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல என்பதோடு அதற்கு தமிழர்களின் வரலாற்று வாழ்வில் தொன்மை மிகு ஆயிலும் கிடையாது எனும் வாதம் பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்ட போதும் அது தமிழர்களின் விழாவாக்கப்பட்டு விட்டது.

தீபாவளி விழா

இந்தப் பண்டிகை மலையகத் தமிழர்களின் மத்தியில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகையில் இவ்வருடம் தேசிய தீபாவளி விழா மாத்தளையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் வடக்கு- கிழக்கு தமிழர்களின் வாழ்விலும், மலையக தமிழர்களின் வாழ்விலும் தீமையின் சக்தி ஒழிய தேசிய மக்கள் சக்தியை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி என்ன திட்டங்களை முன்வைக்க போகின்றார் என்பதே மக்களின் கேள்வி.

நாட்டில் "பாதாள உலகை இல்லாமல் செய்வேன், போதை பொருள் விநியோக மற்றும் பாவனையை ஒழிப்பேன், திட்டமிட்ட குற்ற செயல்களை தடுப்பேன், அரசியல் மற்றும் அதிகார வள கொள்ளையர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவேன்"என ஜனாதிபதி கூறுவதை வரவேற்கின்றோம்.

தமிழர்களுக்கு எதிரான பேரினவாத இருளை தோற்கடிக்க ஒன்றிணையுமாறு கோரிக்கை! | Darkness Of Chauvinism Against Tamils Continues

இதற்கு அப்பால் நாட்டில் தமிழர்கள் முகம் கொடுக்கும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதமே காரணமாகும். அதன் இருள் நாட்டில் தொடர்ந்து சூழ்ந்திருக்கின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதனை பாதுகாப்பதாகவே நாங்கள் தமிழர்கள் உணர்கிறார்கள்.

தமிழர்கள் வாழ்வில் அரசியல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக வாழ்வில் விடியலை காண முடியாது உள்ளது. மாற்றம் எனக் கூறி தமிழ் மக்களினதும் வாக்குகளை பெரும்பான்மை பெரும்பான்மையாகப் பெற்று பெரும் பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல தசாப்தங்களாக தொடரும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வை கொடுப்பதற்கு இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பாரிய இனப்படுகொலையுடன் முடிவுற்ற யுத்தத்தின் போது அரச படையினரால் புரிந்ததாகக் கூறப்படும் யுத்த குற்றங்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

அத்தோடு, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவதற்கோ, சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்த துறவிகளோடு சேர்ந்து முன்னெடுக்கும் நில ஆக்கரமிப்பினை தடுப்பதற்கோ, இராணுவத்தின் வசமிருக்கும் மக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கோ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மட்டுமல்ல தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக கூறிய உறுதிமொழியும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த விடயமானனது தமிழர்கள் வாழ்வில் தொடரும் இருளாகவே நாம் கொள்கின்றோம். தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த அரசியல் கருத்தியல் அரக்க சக்தி தோற்கடிக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும். 

வடக்கின் தேர்தல் பிரச்சார மேடைகளின் போது தற்போதைய ஜனாதிபதி "அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்"என வாக்குறுதி அளித்தது போல மலையகத்தில் மலையக மக்களுக்கு காணி வழங்குவோம்" என கூறியதை அனைவரும் அறிவர்.

தமிழர்களுக்கு எதிரான பேரினவாத இருளை தோற்கடிக்க ஒன்றிணையுமாறு கோரிக்கை! | Darkness Of Chauvinism Against Tamils Continues

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்களை கடந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் எந்த விதமான கொள்கை திட்டம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; மலையகத்தில் பயிரிடப்படாமல் இருக்கும் வெற்று காணிகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பது மலையகத் தமிழ் உழைக்கும் வர்க்கத்தை அடிமையாக வைத்திருப்பதற்கான தீய அரக்க செயற்பாட்டு சிந்தனை என்றே நாம் நினைக்கின்றோம்.

 வடக்கு கிழக்கு தமிழர்கள் மத்தியில் கட்டமைப்பாக காணப்படும் வேற்றுமைகளை களைந்து தமிழரின் தேசியமும் தேசமும் காக்க ஓரணியில் மக்கள் சக்தியாக திரள வேண்டுமென மீண்டும் வேண்டுகோள் விடுப்பதோடு; மழையக தமிழர்களும் தங்களுக்கு எதிரான இருளின் சக்தி யார்? என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.

அத்தோடு, அதற்கு எதிரான மக்களின் சக்தியாக ஒன்று படுவதோடு ஒட்டுமொத்த தமிழர்கள் தமது சக்தியை வெளிப்படுத்தி வாழ்வுக்கு எதிரான அழிக்கும் சக்திகளுக்கு எதிராக எழுச்சிக் கொள்வதே நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதே அனைவரினதும் நம்பிக்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னிச்சையான சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது..! அநுர உறுதி

தன்னிச்சையான சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது..! அநுர உறுதி

வரி திருத்தம் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

வரி திருத்தம் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US