இரவு வேளைகளில் சூழும் இருள்! அச்சத்தில் கொழும்பு மக்கள்
பாணந்துறை புதிய பாலம் தொடக்கம் மொரட்டுவை வரையிலான ஆறு கிலோமீற்றர் பிரதேசம் இரவு வேளையில் இருளில் மூழ்கியுள்ளதால், மக்கள் பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு மின்வெட்டு காலத்தில் குறித்த பகுதியில் இருந்த மின்விளக்குகள் சேதமடைந்திருந்ததால் அகற்றப்பட்டிருந்தன.
இதனால், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி சாலையின் இருபுறமும் உள்ள வியாபாரிகள், பயணிகள் மற்றும் மக்கள் ஆகியோர் துன்பப்படுகின்றனர்.
வீதி விபத்துக்கள்
அத்துடன், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் இரவு நேரங்களிலும் அதிகளவான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இதேவேளை, மோதர, எகொட உயன, கட்டுகுருந்த, கோரல்வெல்ல, மொரட்டுவெல்ல போன்ற பிரதேசங்களிலும் சரியான மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்விளக்குகளை மறுசீரமைக்க ஒதுக்கீடு செய்யப்படாததால் தாமதம் ஏற்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பி.எம். திரு.சூரியபண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
