தனுஷ்கவின் கோரிக்கையை ஏற்று அவுஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கிய அனுமதி
பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக தற்போது தங்கியுள்ள வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிட்னி டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான போது தற்போது தங்கியுள்ள இடத்திலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கான அனுமதியை கோரியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்ககூடியவை என்பதால் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தற்போது தனது ஆதரவாளர் ஒருவருடன் தங்கியுள்ள தனுஷ்க குணத்திலக்க தான் தனியாக தங்கியிருப்பதற்கு அனுமதிக்கும் விதத்தில் பிணைநிபந்தனைகள் மாற்றப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அவர் வேறு யாருடனும் வசிக்கப்போவதில்லை அவர் ஒருஅறை வீட்டில் தனியாக வசிக்கப்போகின்றார் என தனுஸ்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் அதிகமாக வாழும் சிட்னி பகுதி
இலங்கையர்கள் அதிகமாக வாழும் சிட்னியின் இன்னர்வெஸ்ட் பகுதியில் உள்ள ரொடெசிலேயே தான் வாழப்போவதாக தனுஷ்க குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர் தப்பிச்செல்வதற்கான வாய்ப்புகள் குறையும் அவரது சமூக தொடர்பை அதிகரிக்கும் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கும் தனுஷ்க புதிதாக வசிக்கப்போகும் வீட்டிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க தூரம் உள்ளதாக நீதிமன்றத்தில் தனுஷ்க குணத்திலக்கவின் சட்டத்தரணி இதன்போது தெரிவித்துள்ளார்.
May you like this Video





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
