புதிய காதல் உறவு குறித்து பொதுவெளியில் அறிவித்த தனுஷ்க குணதிலக்க
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, தமது புதிய காதல் உறவு குறித்து பொதுவெளியில் அறிவித்துள்ளார்.
ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது, 2022 ஆம் ஆண்டு தனுஷ்க குணதிலக அங்கு கைது செய்யப்பட்டார்.
டிண்டர் சமூக ஊடகத்தில் அறிமுகமான பெண் ஒருவரை, அவரது விருப்பத்துக்கு முரணாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
புதிய உறவு
2023 ஆம் ஆண்டில், நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் தனுஷ்க குணதிலக்க நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கில் கடுமையான குறைபாடுகள் மற்றும் மனுதாரரின் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை மேற்கோள் காட்டி, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன், சட்டச் செலவுகளும் வழங்கப்பட்டன.
தற்போது இலங்கைக்குத் திரும்பி தமது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் தொடங்கியுள்ள தனுஷ்க குணதிலக்க, இந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தமது புதிய உறவு குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
ஆதரவான கருத்து
இந்தநிலையில், தமது காதலியுடனான புகைப்படங்களை பகிர்ந்து தமது கடந்த கால அனுபவத்தையும் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
திருமணமா அல்லது எதிர்கால நீதிமன்ற திகதிக்கான சாத்தியக்கூறுகளா, எனக்கு இன்னும் பயங்கரமானது எதுவென்று தெரியவில்லை, மதுவை அனுப்புங்கள், அல்லது சட்டத்தரணியின் பரிந்துரையை அனுப்புங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவான கருத்துகளைப் பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
