நுவரெலியா - டன்சினன் பிரதான பாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு
2024ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் - பூண்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையானது கார்பட் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (20.07.2024) இடம்பெற்றுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardana) மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரால் இந்த பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் முன்னெடுப்பு
பல வருட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்ட, 9 கி.மீ வரையிலான குறித்த பாதைக்கு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் 13 பில்லியன் ரூபா நேரடி நிதி ஒதுக்கீட்டீன் மூலம் கார்பட் இடப்பட்டுள்ளது.

இந்த வீதியினை 30இற்கும் மேற்பட்ட தோட்டங்களை சார்ந்தவர்கள், வைத்தியசாலை தேவைளுக்கு, மற்றும் பல்வேறு வகையிலான தேவைபாடுகளுக்காக பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இந்த வீதியினை புனரமைத்து தருமாறு கடந்த காலங்களில் மக்களால் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
அபிவிருத்தி வேலைத்திட்டம்
எனவே, இதற்கான தீர்வினை பெற்று கொடுக்கும் முகமாக இவ் அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அனைவர் சார்பாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரனுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில், இ.தொ.கா பிரதி பொதுச் செயலாளர், ஏனைய இ.தொ.கா பிரதிநிதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர், நுவரெலியா பிரிவுக்கான நிறைவேற்று பொறியியலாளர், நோர்வூட் பிரிவுக்கான பொறியியலாளர் மற்றும் தோட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri